June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவிலேயே பணக்கார முதல்-மந்திரி பட்டியில் சந்திரபாபு நாயுடு முதலிடம்

1 min read

Chandrababu Naidu tops the list of richest Chief Ministers in India

25.8.2025

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆண்டு தோறும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டில் இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலின்படி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, ரூ.931 கோடி சொத்து மதிப்புகளுடன் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தொடங்கிய பால் உற்பத்தி நிறுவனமாகும்.

அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் நாரா (சந்திரபாபுநாயுடு குடும்ப பெயர்) குடும்பத்தினர் மொத்தம் 41.3 சதவீதத்தை வைத்துள்ளனர். இதன் மதிப்பு 1995-ம் ஆண்டு ரூ.25 கோடியாக இருந்தது. அதன் சந்தை மூலதனம் ரூ.4,381 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. அதிகபட்சமாக 1,81,907 பங்குதாரர்களை கொண்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு ரூ.332 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைச் சொந்தமாகக் கொண்டு, நாட்டின் இரண்டாவது பணக்கார முதல்-மந்திரியாக பதிவாகியுள்ளார். பெமா காண்டுவின் கணிசமான சொத்துக்கள் மற்றும் வணிக நலன்கள் முதல் இரண்டு பணக்கார முதல்-மந்திரிகளில் அவரது பெயரை இடம் பெற செய்துள்ளன. சந்திர பாபு நாயுடு மற்றும் பெமா காண்டு இருவரும் கோடீஸ்வர முதல்-மந்திரிகள் ஆவர்.
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ரூ.51 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாயுடு மற்றும் காண்டுவின் சொத்துக்களை விட அவரது சொத்துக்கள் கணிசமாகக் குறைவாக இருந்தாலும், அவர் பல இந்திய முதல்-மந்திரிகளை விட செல்வந்தராகவே இருக்கிறார்.

ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள பட்டியலில் கடைசி வரிசையில் வெறும் ரூ.15.38 லட்சம் சொத்துக்களுடன் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளார். அவர்தான் மிகவும் வசதி குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்னதாக அடுத்தடுத்த இடத்தில் ஜம்மு- காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா (ரூ.55.24 லட்சம்) மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் (ரூ.1.18 கோடி) ஆகியோர் உள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தேர்தலின்போது பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்ததின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *