June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பள்ளியில் விளையாட்டு விழா

1 min read

Sports festival at Avudaiyanur school

28.8.2025
தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பள்ளி நிர்வாகி அருட்திரு அந்தோணி குரூஸ் அடிகளார், செயின்ட் ஜோசப் கல்வியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி செயலர் அருட்திரு செல்வராஜ் அடிகளார், அருட்திரு ஜோ வர்க்கீஸ் அடிகளார் முன்னிலை வகித்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் வரவேற்றார்.
சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றி வைத்தார். மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து அணிகளாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் வியாகப்பன், அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *