கொல்லம் – தாம்பரம் தினசரி ரயில் நேரம் மாற்றம்; வேகம் அதிகரிக்கப்படுமா?
1 min read
Kollam – Tambaram daily train timings change
28.8.2025
கொல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை தென்காசி வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் தினசரி ரயிலின் நேரம் செப்.1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.
கொல்லம் தாம்பரம் இடையே தினசரி ரயில் ( 16102) கொல் லத்தில் இருந்து தினமும் பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு குன்டாரா, கொட்டாரக்கரா, ஆவனேஸ்வரம், புனலூர், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர், மதுரை, திண் டுக்கல், திருச்சி, விருத்தாச் சலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்பட்டு அதிகாலை 2.30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேர்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ரயில் கொல்லத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் வகையில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொல்லத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கோட்டைக்கு இரவு 7.10 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர் 7.15 மணிக்கு புறப்பட்டு தென்காசி ரயில் நிலையத்திற்கு 7.28 மணிக்கு வந்து சேர்கிறது.
அங்கிருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு 7.41 மணிக்கு கடையநல்லூர் செல்கிறது பின்னர் 7.45 மணிக்கு புறப்பட்டு 8.08 மணிக்கு சங்கரன்கோவில் செல்கிறது.
அங்கிருந்து 8.10மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு இரவு 10.25 மணிக்கும், திருச்சிக்கு அதிகாலை 1.45 மணிக்கும் சென்றடைறது அதனைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சென்னை தாம்பரம்
சென்றடைகிறது.
இந்த தினசரி ரயில் நேரம் மாற்றத்தால் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரசுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் முன்பு இயங்கி நேரத்தில் இந்த ரயிலை பிடிக்க முடியாத நிலை இருந்தது.
தற்போது அன்றாட பணியை முடித்து விட்டு செங்கோட்டை, தென்காசி,கடையநல்லூர், சங்கரன்கோவிலில், பகுதிகளில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு இந்த ரயில் மாற்றம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பொதிகை எக்ஸ்விரஸ் தென்காசியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 11 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. ஆனால் கொல்லம் எக்ஸ்பிரஸ் தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லவே 12 மணி நேரம் ஆகிறது. அங்கிருந்து புறநகர் ரெயில் மாறிதான் எழும்பூர் செல்ல வேண்டும். அப்படியென்றால் 13 மணி நேரம் ஆகிவிடும். எனவே கொல்லம் ரெயில் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். காலை 6.30 மணிக்கெல்லாம் தாம்பரம் சென்றடைந்தால் வேலைக்குச் செல்வோருக்கு வசதியாக இருக்கும்.