தமிழகத்தில் கூட்டணியை பலப்படுத்துவது குறித்து அமித்ஷா ஆலோசனை
1 min read
Amit Shah discusses strengthening alliance in Tamil Nadu
3.9.2025
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லி கிருஷ்ணா மேனன் சாலையில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் உட்கட்சி பூசல்களை களைவது எப்படி?, 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம், தொகுதி பங்கீடு, தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பாஜக வலுவாக இருக்கிறது? அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித்ஷாவின் ஆலோசனை கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை கூறுகையில், “அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் டெல்லி செல்லவில்லை” என்று கூறினார்.