June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே விவசாயி மீது தாக்குதல்; 6 பேர் கைது

1 min read

Attack on farmer near Tenkasi; 6 arrested

4/9/2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விவசாயியை சரமாரியாக தாக்கிய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மாவடிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் இவரது மகன்கள் சண்முகவேல் (வயது 60) சசிகுமார் (வயது 55) இவர்கள் இருவரும் விவசாயிகள் இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகவேல் சசிகுமார் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சசிகுமாருக்கு ஆதரவாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சண்முகவேலை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தகராறில் சண்முகவேல் அணிந்திருந்த தங்க செயினையும் அந்த கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சண்முகவேல் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சண்முகவேலை தாக்கிய கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கருமாரி என்பவரது மகன் அருண்குமார் (வயது 20) ராமகிருஷ்ணன் என்பவர் மகன் (சூர்யா 29) கொள்ளி மாடசாமி என்பவரது மகன் இசக்கித்துரை (வயது 23) கண்ணன் என்பவரது மகன் பொன்ராஜ் (வயது 24) காளிமுத்து என்பவரது மகன் கருமாரி (வயது 23) மற்றும் வேலு ஆகிய ஆறு பேர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய சண்முகவேலின் தம்பி சசிகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் சசிகுமார் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *