டிரம்ப் விருந்தில் புறக்கணிக்கப்பட்ட எலான் மஸ்க்
1 min read
Elon Musk ignored at Trump party
5/8/2025
அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் இரவு விருந்து வைத்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விருந்தில் பங்கேற்றவர்களிடம் செயற்கை நுண்ணறிவு மற்றும் அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பது குறித்து டிரம்ப் கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், அமெரிக்காவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஒரு வருடம் கழித்து தெரியும் என கூறினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த டிரம்ப், உக்ரைன் போர் தொடர்பாக விரைவில் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.