June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் மாயமான வியாபாரி கழிப்பறையில் பிணமாக மீட்பு

1 min read

Missing businessman found dead in Courtallam toilet

7.9.2025
குற்றாலத்தில் மாயமான வியாபாரி கழிப்பறையில் சடல மாகக் கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அவர் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெருவைச் சேர்ந்த முகம்மது யாகூப் என்பவரது மகன் பசூல் ஹக் (வயது 56), வியாபா ரியான இவர், மதுக்கூரில் டூவிலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர்கள் மற்றும் டீலர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் இரு வேன்களில்
குற்றாலத்திற்கு வந்தனர். நேற்று காலை-6 மணிக்கு தேரடி கார்பார்க்கிங்கில் வேன்களை நிறுத்திய பிறகு அனைவரும் காலை 7 மணிக்கு குற்றாலம் மெயினருவியில் குளிக்கச் சென்றனர். அருவியில் குளித்து முடித்த அனைவரும் தாங்கள் வந்த வேனுக்கு வந்துள்ளனர்.

அப்போது பசூல் ஹக்கை மட்டும் காணவில்லை. இதனால் பதறிய அனைவரும் வரும் அருவிப்பகுதி மற்றும் பல இடங்களில் தேடிப் பார்த்தபோதும் மாயமான பசூல்ஹக் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், போன் செய்தபோது செல்போன் வேனில் இருந்தது தெரியவந்தது. வேனை நிறுத்திய இடத்திலும் அவரை காணவில்லை . இதுபற்றி நேற்று மாலை குற்றாலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

குற்றாலம் போலீ சார் உடனடியாக தேடுதல் வேட்டையை துவக்கிய நிலை யில் குற்றாலம் கோயில் தேரடி கார்பார்க்கிங்கில் உள்ள பொது கழிப்பறையில் பசூல் ஹக் இறந்துக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவம் னைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அருவியில் குளிப்பதற்காக வந்த பசூல் ஹக் இயற்கை உபாதையை கழிக்கும் பொருட்டு கழிப்பறைக்கு உள்ளே சென்ற போது குப்புற கவிழ்ந்து விழுந்தது தெரிய
வந்தது. இருப்பினும் அவர் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் பற்றி உடனடியாகத் தெரியவரவில்லை.

இதுகுறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் எனத் தெரிவித்த போலீசார், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இதனிடையே ரத வீதி பகுதியில் நடந்த இந்த மரணம் காரணமாக குற்றாலநாதர் கோயில் மற்றும் அதைச் சார்ந்த கோயில்களில் நேற்று நடை அடைக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *