June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

1 min read

Holiday: Tourists take a blissful bath in Courtallam

7.9.2025
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில், இன்று வார விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *