June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

லண்டனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பென்னிகுயிக் குடும்பத்தினர் சந்திப்பு

1 min read

Pennyquick family meets Chief Minister MK Stalin in London

7.9.2025
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.

இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கின் குடும்பத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் ‘ எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் – செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்!
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *