மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
1 min read
DMK district secretaries meeting to be held tomorrow under the chairmanship of MK Stalin
7.9.2025
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ( செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது
இவ்வாறு தெரிவித்துள்ளார்.