மைக் பிரச்சினையால் விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
1 min read
Volunteers who came to listen to Vijay’s speech disappointed due to microphone problem
13.9.2025
விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுனார். காலை விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு காந்தி மார்க்கெட் மரக்கடை வந்தடைந்தார். அப்பகுதியில் தவெக தொண்டர்கள் கடலென திரண்டு இருந்ததால் மரக்கடை செல்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் தொண்டர்கள் மத்தியில் பேச தொடங்கினார்.
அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் என்ன பேசினார் என்றே தெரியவில்லை என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில், ‘நான் பேசுறது கேட்கிறதா?’ என விஜய் சைகையில் கேட்க, ‘இல்லை இல்லை’ என கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் சிறுது நேரத்தில் பரப்புரையை நிறைவு செய்தார். விஜயின் பரப்புரையை கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
முதல் பரப்புரையிலேயே மைக் சொதப்பியதால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.