பாவூர்சத்திரம், பண்பொழி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
1 min read
Power outage in Pavurchatram, Panpozhi area the day after tomorrow
14.9.2025
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (16.9.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (16.9.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர்.
வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு ஆகிய இடங்களில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.