பாகிஸ்தான் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல்
1 min read
Indian External Affairs Ministry says it is reviewing Pakistan-Saudi security deal
18.9.2025
பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தம் நமது தேசிய பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்கிறோம். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், அதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது” என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.