June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

எச்.வி. ஹண்டே எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை – மு.க.ஸ்டாலின் பதிவு

1 min read

H.V. Hunte’s letters always inspire me – M.K. Stalin

24.9.2024
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 1984-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் எம்.ஜி.ஆர். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டவர்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் எச்.வி. ஹண்டேவை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்தநிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் – தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் திரு. எச்.வி. ஹண்டே அவர்கள் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை. 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *