June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனார்- முதல்-அமைச்சர் புகழாரம்

1 min read

Pioneer of Tamil journalism C.P.A.Adhithanar – Chief Minister M.K.Stalin praises him

27.9.2025
`தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் இதழியலின் முன்னோடியாகப் பாமரருக்கும் எளிய மொழிநடையில் உலக நடப்புகளைக் கொண்டு சென்ற திரு. சி.பா. #ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் அவருக்கு என் புகழ் வணக்கங்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *