August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்களை கடந்தது

1 min read

Elon Musk’s net worth crosses $500 billion

3.10.2025
டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். ‘
அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த புதன் மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டாலராக சற்று இறக்கம் கண்டது.
இதனால் அவர் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலும், மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்துகளின் இந்திய மதிப்பு ரூ.44.33 லட்சம் கோடியாகும். இதே வேகத்தில் அவரது சொத்து மதிப்புகள் உயர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தனிநபரின் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் உலகின் முதல் டிரில்லியனராக அவர் இடம் பிடிப்பார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *