மாதாபட்டணம் பள்ளி நாட்டு நலபணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா
1 min read
Mathapattanam School National Welfare Project Special Camp Closing Ceremony
3.20.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சற்குண சத்திய வித்யாலயா மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் ஏழு நாட்கள் குத்தபாஞ்சான் ஊராட்சி ஒன்றியம் காளத்தி மடத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில்நடைபெற்றது.முகாமில் இலவச கண் பரிசோதனை முகாம், கண்தான விழிப்புணர்வு முகாம், யோகா விழிப்புணர்வு முகாம் மற்றும் உழவாரப்பணிகள் நடைபெற்றது ஏழாவது நாளானா இன்று நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றாலிங்கம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு குத்தபாஞ்சான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார் தலைமை தாங்கினார்.
குத்தபாஞ்சான் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்புராஜ், குத்தபாஞ்சான் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மயில் ராணி, திருமுருகன் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் பசுபதி தேவி திரா
ராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் சேவை மனப்பான்மை குறித்து குத்த பாப்பான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி வெகுவாக பாராட்டினார்.
வார்டு உறுப்பினர் மாணவர்களின் பணிகளை குறித்து பேசினார்.பள்ளியின் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றாலிங்கம் முகாம் அறிக்கையினை
சமர்ப்பித்தார்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சேர்மராஜா நாட்டு நல பணி திட்டத்தின் நோக்கம் அதை மாணவர்கள் சிறப்பாக செய்தனர் என்று நாட்டு நல பணி திட்ட மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ச.ச.வி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றாலிங்கம் மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.