June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூரில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்- பெண் போலீஸ் படுகாயம்

1 min read

Two bikes collide head-on in Keelappavur – Female police officer seriously injured

3.10.2025

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிழப்பாவூரில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் சுரண்டை காவல் நிலைய பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி அன்பரசி (வயது 34) இவர் சுரண்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பெண் காவலர் அன்பரசி வழக்கம்போல் ஆவுடையானூரிலிருந்து கீழப்பாவூர் வழியாக சுரண்டை காவல் நிலையத்திற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்‌.

அப்போது கீழப்பாவூர் எஸ்.கே. ஆர்.தெருவை சேர்ந்த காசி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 38) என்பவர் ஓட்டி வந்த பைக் பெண் காவலர் அன்பரசி ஓட்டி வந்த பைக் மீது வேகமாக மோதியது இதில் பெண் காவலர் அன்பரசி தலையில் பலத்த காயமடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) காளிமுத்து உதவி ஆய்வாளர் பட்டுராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் இருந்த பெண் காவலர் அன்பரசியை மீட்டு சிகிச்சைக்காக பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *