August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி சாய் பாபா கோவிலில் மோட்ச தீபவழிபாடு

1 min read

Moksha Deepa ceremony at Tenkasi Sai Baba Temple

3.10.2025
தென்காசியில் உள்ள ஷீரடி வைத்திய சாயி பாபா கோவிலில் சாய் பாபாவின் 107-வது மகா சமாதி தினத்தையொட்டி மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத்தன்று சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் நடத்தி வருகிறார்கள்.

அதன்படி தென்காசி மங்கம்மா சாலையில் உள்ள ஷீரடி வைத்திய சாயி பாபா கோவிலில் இன்று சாய்பாபாவின் 107-வது மகா சமாதி தினம் நடத்தப்பட்டது.
இதையடுத்து மூலவர் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து சாய்பாபா மகாசமாதி அடைந்த நேரத்தை குறிக்கும் வகையில் மதியம் 2.30 மணிக்கு மூலவர் பாபாவின் முன்னால் “மஹாசமாதி மோட்சதீபம்” ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மோட்சதீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

இதேபோல விஜயதசமி
விழாவை முன்னிட்டு சாய்பாபா கோயிலில் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் வழிபாடு நடந்தது. இதில் நெல்மணியில் ‘அ’ என எழுத வைத்து குழந்தைகளுக்கு கற்றலை பெற்றோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *