August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

எச்-1பி விசா கட்டணம் உயர்வு: அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு

1 min read

H-1B visa fee hike: Case filed in US court against Trump order

5.10.2025
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை பயன்படுத்தி 3 ஆண்டுகளுக்கு அங்கு தங்கி பணிபுரியலாம். தேவைப்பட்டால் அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்கு அதனை நீட்டிக்க முடியும்.
அதன்படி தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 65 ஆயிரம் விசாக்களை அரசாங்கம் வழங்கி வந்தது. அதேபோல் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த 20 ஆயிரம் பேருக்கும் எச்-1பி விசா வழங்கப்பட்டது. எனவே சுமார் 13 லட்சம் வெளிநாட்டினர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்-1பி விசா கட்டணத்தை ரூ.9 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.90 லட்சமாக டிரம்ப் உயர்த்தினார். அவரது இந்த அறிவிப்பு அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *