June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சனாதனத்தை அவமதித்தால் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர்

1 min read

Lawyer throws shoe at Chief Justice P.R. Kawai in Supreme Court if he insults Sanatan

6.10.2025
உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சமயத்தில் 'சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.

இதனையடுத்து காலணி வீசிய வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "கவனத்தை சிதறவிடாதீர்கள். இத்தகைய விஷயங்கள் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது" என்று தெரிவித்தார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவன வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.
அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்ளீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தான் அவர் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *