தீபாவளி அன்று எப்படி குளிக்க வேண்டும்?
1 min read
How to take a bath on Diwali
17.10.2025
தீபாவளி அன்று எண்ணெய் குளியல் செய்யும் முன்பு சில விதிகளை பின்பற்றினால் பூரண பலன் கிடைக்கும். அதிகாலை 3 மணிக்கு எழுந்து நாம் குளிக்க வேண்டிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். அன்றைய தினம் அந்த தண்ணீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். எனவே அதை கங்கைக்கு ஒப்பாக கருத வேண்டும். எனவே அந்த பாத்திரத்தை குங்கும் சந்தனம் வைத்து வணங்க வேண்டும். பின்னர் ஆல், அரசு, பிரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய மரங்களின் பட்டைகளை தண்ணீரில் கலக்கவேண்டும். பின்னர் குளிக்கும் முன்பு நாயுருவி செடியால் தங்களது தலையை 3 தடவை சுற்றி பிறர் கால் படாத இடத்தில் எறிந்துவிட வேண்டும். அதன்பின் எண்ணெய் உடலில் எண்ணெய் தேய்த்து ஊறியபின் குளிக்க வேண்டும். எண்ணெயை தேய்க்கும் முன்பு அதை தொட்டு பூமியில் 3 முறை வைக்க வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் தேய்த்து குளித்ததன் பூரண பலன்கள் கிடைக்கும்.
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணை பயன்படுத்துவது மிகநல்லது. அதுவும் சுத்தமான எண்ணெயை பார்த்து வாங்க வேண்டும் நல்லெண்ணை ஒத்துக் கொள்ளாதவர்கள் வேண்டுமானால் வேறு எண்ணெய் பயன்படுத்தலாம்.
எண்ணெய் தேய்த்து குளித்ததால் உடல் குளிர்ச்சி அடையும். எலும்புகள் எல்லாம் இளகி நிற்கும். அன்றை தினம் நாம் பகலில் தூங்கக்கூடாது. ஏனெனில் நம் உடலில் உள்ள வெப்பம் கண் வழியாக வெளியேறும். கண்மூடி தூங்குவதால் வெப்பம் வெளியேறாமல் உடல் சூட்டை கிளப்பி விடும். மேலும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தலையில் உள்ள எண்ணெய் கசடு பூரணமாக போய் இருக்காது. பகலில் தூங்குவதால் தலையில் நீர் கட்டி தலைவலி ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு ஊண்டு. மேலும் எண்ணெய் குளியலுக்கு பின்னர் அன்றை தினம் தலைவாரும் போது மீண்டும் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டாம்.