முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந் தேதி தென்காசி வருகை
1 min read
Chief Minister M.K. Stalin to visit Tenkasi on the 25th
தென்காசிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பா டுகளை தென்காசி கலெக்டர், எஸ்பி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தருகிறார். அப்போது பல் வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவடைந்த திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
இதற்காக தென்காசி அருகே உள்ள இலத்தூர் விலக்கு ஆய்க்குடி சாலையில் தென்காசி மங்கம்மா சாலை சந்திக்கும் இடத்தில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
தென்காசி கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர், எஸ்பி செ.அரவிந்த் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் இடம், பந்தல் அமைப்பு, நிகழ்ச்சி நடை பெறும் இடத்தில் பாது காப்பு அம்சங்கள் ஆகியவற்றை பார்வை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர், எஸ்பி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதலமைச்சர் மறுநாள் 25ம்தேதி காலையில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மைதானத் தில் இருந்து ஆய்க்குடி அமர்சேவா சங்கம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சுரண்டை வழியாக ஆலங்குளம் சென்று தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.