August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பண்பொழி திருமலைக் கோவில் உண்டியலில் ரூ.27.15 லட்சம், 22.400 தங்கம், 800 கிராம் வெள்ளி காணிக்கை

1 min read


Panpozhi Thirumalai Temple treasury contains Rs. 27.15 lakhs, 22,400 gold bars, and 800 grams of silver coins

18.10.2025

தென்காசி மாவட்டம், பண்பொழியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று திறந்து எண்ணப்பட்டது.

திருமலைக்குமாரசுவாமி கோவில் உதவி ஆணையர் கோமதி தலைமையில், அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் செட்டியார், அறங்காவலர் உறுப்பினர்கள் அழகப்பபுரம் வே.கணேசன், பண்பொழி இசக்கி, வடகரை பாப்பா, குற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர் சேதுராமன், தலைமை எழுத்தர் லட்சுமணன் ஆகியோரது முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம், நகைகள் உள்ளிட்டவைகள் கணக்கிடப்பட்டது.

அப்போது, உண்டியலில் ரூ.27 லட்சத்து 15 ஆயிரத்தி 257 ரூபாய் பணம், 22.400 கிராம் தங்கம், மற்றும் 800 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகள் இருந்த நிலையில், அதனை முறையாக கணக்கிட்டு சீல் வைத்து கோவில் வங்கி கணக்கில் அதிகாரிகள் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *