August 7, 2026

Seithi Saral

Tamil News Channel

வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகை-மாவட்ட ஆட்சியர் தகவல்

1 min read

District Collector informs about assistance for unemployed youth

18.10.2025
தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான களு உதவித்தொகை திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் 3 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். எஸ்பி, எஸ்சி,எஸ்சிஏ, எஸ்டி, பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி, பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-(எழுபத்திரண்டு ஆயிரம்) மிகாமல் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு. வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/-பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/-வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ / மாணவியர், பொறியியல், மருத்துவம். விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும். பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பொதுப்பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ். மாற்றுச்சான்றிதழ் (TC). தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் கதவு எண்.168 முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்) குத்துக்கல் வலசை அஞ்சல், தென்காசி. என்ற முகவரியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அலுவலகத்திற்கு நேரில்
விண்ணப்பதாரர் அரசுத்துறை / தனியார்த்துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்த விதமான உதவித்தொகையும் பெறுபவராக வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்களுக்கான உதவித்தொகை தொருத்தல் பெற்றிருப்பின் எகனவே உதவித்தொகை பெற இயலாது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *