June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் யார்?

1 min read

Who died in an accident near Alankulam?

18.10.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மேல கரும்புளியூத்து பகுதியில் கார் மோதிய விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபர் யார்? என்று தெரியவில்லை. அடையாளம் தெரிந்தவர்கள் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ராபர்ட் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ராபர்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இத்துடன்இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அடையாளம் தெரியாத சுமார் 40 க்குமேல் 45 வயதுக்குள் உள்ள ஆண்நபர் கடந்த 11.10.2025 ம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் தென்காசி – திருநெல்வேலி ரோட்டில் மேலகரும்புளியூத்து பஸ் ஸ்டாப் அருகே நடந்து செல்லும்போது மேற்படி ரோட்டில் மேற்கிருந்து கிழக்காக திருநெல்வேலியை சேர்ந்த பால்பட்டர் மாணிக்கம் என்பவர் ஓட்டிச்சென்ற கார் மோதி விபத்துகுள்ளாகி பலத்த ரத்தகாயங்கள் ஏற்பட்டு சுயநினைவு இன்றிருந்தவரை மேற்படி காரை ஒட்டிவந்த நபர் அந்த நபரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து அங்கு முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி 16.10.2025 ம் தேதி இரவு சுமார் 11.00 மணிக்கு இறந்துள்ளார். மேற்கண்ட அடையாளம் தெரியாத நபரை பற்றி விபரங்கள் தெரிந்தால் கீழ்கண்ட செல்போன் எண்களில் தகவல் தெரிவிக்கவும்

தகவல் தெரிவிக்கவேண்டிய செல்போன் எண்கள்
ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ராபர்ட் செல் எண் – 9498193007,
ஆலங்குளம் உதவி ஆய்வாளர் உடையார்சாமி செல் எண் : 9786853737, ஆலங்குளம் உதவி ஆய்வாளர் மாரியப்பன் செல் எண்: 9500755050 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *