June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பெரம்பலூர் சங்குபேட்டையில் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

1 min read
Seithi Saral featured Image

Special puja at Muthumariamman Temple in Sangupet, Perambalur

21.10.2025
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருகோயில் ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் இத்திருகோயிலில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து அம்மனை பெண்கள் மற்றும் மகளிர் குழுவினர். மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். ஐப்பசி மாதம் 4ம் தேதி அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.19 வார்டு அன்னதான குழுவினர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர் . மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை சங்கு பேட்டை,19 வது வார்டு அன்னதான குழுவினர் முன்னின்று நடத்தி வருகிறர்கள் .விழாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் கண்ணபிரான்,முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *