போலீசாரின் பாலியல் வன்கொடுமை; பெண் டாக்டர் தற்கொலை
1 min read
Sexual assault by police; female doctor commits suicide
மகாராஷ்டிராவில் காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த பெண் மருத்துவர் நேற்றுமுன்தினம் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், “எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்” என்று என்று எழுதப்பட்டிருந்தது.
மாகாராஷ்டிர காலவத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், “காவல்துறையின் கடமை பாதுகாப்பது, ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரைச் சுரண்டினால், எப்படி நீதி கிடைக்கும்? பாதுகாக்க வேண்டியவர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால் எப்படி?..
இந்தப் பெண் ஏற்கனவே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஆளும் மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையைப் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.