June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு

1 min read

Tiruchendur Temple Soorasamharam: Police announcement regarding traffic restrictions

25.10.2025
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மேற்சொன்ன இரண்டு தினங்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மேற்சொன்ன இரண்டு தினங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடங்கள்:

தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூஅதேபோன்று குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி/ தூத்துக்குடி செல்லவும்.

ர்நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி/தூத்துக்குடி செல்லவும்.

எனவே இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *