August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவை: மரத்தின் மீது கார் மோதி விபத்து – 4 வாலிபர்கள் பலி

1 min read

Coimbatore: Car crashes into tree, 4 youths die

25.10.2025
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். பிரபாகரன் (19) என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நண்பர்களான 5 பேரும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மதுபோதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 2 பேர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் கோவையில் உள்ள தனியார் கார் வாஷிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாட்டர் வாஷ் செய்ய வந்த காரை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *