தென்காசி கோயிலில் சிவனடியார்கள் திருவாசகம் பாடி போராட்டம்
1 min read
Shiva devotees protest by singing Thiruvasakam at Tenkasi temple
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் சிவன டியார்கள் மற்றும் இந்து முன்னணியினர் திருவாசகம் பாடி அறப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் கடந்த வாரம் திருவாசகம் பாடிய சிவனடியார்களிடம் கோவில் செயல் அலுவலர் பணம் செலுத்த வலியுறுத்தி அவதூறாக பேசி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அறநிலையத்துறையின் செயல் அலுவலர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று காலை தென்காசி-புதிய பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தென்காசி மாவட்டகாவல்துறை அனுமதி மறுத்தது.
இதனால் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கில் திரண்ட இந்து முன்னணியினர், சிவனடியார்கள் அங்கிருந்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தென்காசி மாவட்ட சிவனடியார் திருக்கூட்ட ஒருங்கிணைப் பாளர் கயிலை கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர்.
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் சிவனடி யார்களும், இந்து முன்னணியினரும்
விஸ்வநாதர் ஆலயத்தில்
காசி விஸ்வநாதரை சிவாயநம நாமாவளி பாடியவாறு வலம் வந்த பிறகு பலி பீடம் அருகே அமர்ந்து திருவாசகம் பாடி அறப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த நிகழ்வில் இந்துமுன் னணி தென்காசி மாவட்ட துணைத்தலைவர் இசக்கி முத்து, மாவட்ட பொதுச் உலகநாதன், ஆறுமுகம், கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவா, மாரியப்பன், பெரிய காசி, திருமலை, மாரிமுத்து, செயலாளர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர்கள் பால்ராஜ், குளத்தூரான்,
ஈஸ்வரன், தென்காசி நகரத் தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர தலைவர் மாசானம். செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, சுரண்டை நகர தலைவர் நாராயணன், தென்காசி நகர செயலாளர் சொர்ண சேகர், பாலாஜி, நகர செயற் குழு உறுப்பினர் மணி. சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த சத்தியபாமா, தலைவர் தங்ககுமார், விஸ்வநாதன் விஷ்வ ஹிந்து பரிஷத் தளவாய், தென்காசி மாவட்ட பாஜக துணை தலைவர் எஸ். முத்துக்குமார், தென்காசி நகர பாஜக தலைவர் எஸ்.சங்கர சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.