தென்காசி:விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்
1 min read
Tenkasi: Farmers can join the Prime Minister’s Crop Insurance Scheme and benefit from it
தென்காசி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, மக்காச்சோளம், நெல் – II ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, மக்காச்சோளம், நெல் II ஆகிய பயிர்களுக்கான பதிவுகள் நடைபெற்று வருகின்றன. பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்ய உளுந்து, பாசிப்பயறு பயிர்களுக்கு நவம்பர் 15 கடைசி நாளாகவும், பருத்தி, மக்காச்சோளம் பயிர்களுக்கு நவம்பர் 30 கடைசி நாளாகவும், நெல் பயிருக்கு டிசம்பர் 16 கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேர் பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை உளுந்து பயிருக்கு ரூ.629.85 எனவும். பாசிப்பயறு பயிருக்கு ரூ.467.99 எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ.822.51 எனவும், பருத்தி பயிருக்கு ரூ.1447.11 எனவும். நெல்-II பயிருக்கு 1333.80 எனவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அறிவிக்கை செய்யப்பட்ட அலகுகளில் உரிய காலத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இறுதி நாளுக்கு முன்னதாகவே பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியின்வேளாண்மைத்
துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.