June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை

1 min read

Elderly man sentenced to death for burning son’s family in Kerala

31/10/2025
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது (வயது82). இவர் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் முகமது பைசல்(45), மருமகள் ஷீபா(40), பேத்திகள் மேக்ரின்(10), அஸ்னா(13) ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதில் அவர்கள் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடுபுழா முட்டம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கொலையாளி ஹமீதுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *