August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

மேலபட்டமுடையார்புரத்தில் ரூ.30 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

1 min read

Overhead water tank at Melapattamudaiyarpuram at a cost of Rs. 30 lakhs

5.11.2025
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலபட்டமுடையார்புரத்தில் ரூ.30 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்‌.ராஜன் திறந்து வைத்தார்.

கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட மேலபட்டமுடையார்புரத்தில் 12,8வது வார்டு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் ஜா. மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 12-வது வார்டு உறுப்பினர் தேவஅன்பு அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீ.பொன்செல்வன், பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி உறுப்பினர்கள் கோடீஸ்வரன், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜிராஜன், முத்துசெல்விஜெகதீசன், சாமுவேல்துரைராஜ், மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுதாகர், துப்புரவு மேற்பார்வையாளர் குமார் மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்சாமி, 12வது வார்டு செயலாளர் அழகேசன், மாவட்ட பிரதிநிதி தங்கபாண்டியன், 8வது வார்டு செயலாளர் ராமசாமி, முத்து, மதியழகன், யோசேப்பு, சௌந்தர்ராஜன், ராஜேந்திரன், பெரியமுத்து (எ) ராஜா, முருகன், யோசபாத்ரா, ஜேசுதாசன், செல்லத்துரை, மாடசாமி, வேல்குமார், சைமன், அப்பாத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *