June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆதரவற்ற பெண்கள் நலவாரியம் மூலம் தையல் பயிற்சி, சான்றிதழ்- தென்காசி கலெக்டர் வழங்கினார்

1 min read

Sewing training and certificates provided by the Destitute Women’s Welfare Board – Tenkasi Collector 5.11.2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் மூலம் இலவச தையல் பயிற்சி நிறைவு செய்த 50 பெண்களுக்கு சான்றிதழ்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் மூலம் கணவரை இழந்த பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் நோக்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள 50 பெண்களுக்கு 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி நிறைவு பெற்றதை முன்னிட்டு பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.

இந்நிகழ்வில் தையல் பயிற்சி பெற்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் கடையநல்லூர் வட்டார பகுதிகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தையல் பயிற்சிக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் பே.மதிவதனா மற்றும் சமூக நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *