குற்றாலத்தில் பனை விதைகள் நடும் விழா- ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Palm seed planting ceremony in Courtallam – Collector participates
தென்காசி மாவட்டம் குற்றாலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ரா.ராஜ்மோகன், முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் தென்காசி மாவட்ட வன அலுவலர் டாக்டர்ரா.ராஜ்மோகன் முன்னிலையில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
குற்றாலம் கூட்டுக் குடிநீர் திட்டம் 1965 ஆண்டு தொடங்கப்பட்ட மிகவும் பழமையான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தென்காசி நகராட்சி, குற்றாலம், மேலகரம். இலஞ்சி பேரூராட்சிகள் மற்றும் காசிமேசர்புரம் ஊராட்சிகளுக்கு 69 ஆண்டு காலமாக தினமும் 25 லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இக்கோடைகால நீர் தேக்கத்தின் கொள்ளளவு சுமார் 3795 லட்சம் லிட்டர் ஆகும். இதன் மூலம் சுமார் 125 இலட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தென்காசி குடிநீர் வடிகால் வாரிய வளாகத்தில் அமைந்துள்ள நீர் தேக்க குளக் கரைகளில் பனை விதை நடவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட பனை நடவு மொத்தம் மூன்று லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதில் இன்றைய தினம் ஒரு லட்சம் பனை விதை நடவு செய்யப் பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள் சார்பாக இன்று பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக குற்றாலம் குடிநீர் வடிகால் வாரிய வளாகத்தில் தென்காசி வனச்சரகம் சார்பில் 3000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தென்காசி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் இளங்கோ, தென்காசி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் அர்ஜீன். தென்காசி வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம், தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை, வனவர் சங்கர் ராஜா, மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன். பசுமைத் தோழர் ஜா.பெரோலின் ஜெசினா, மற்றும் மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.