சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி: தென்காசி கலெக்டரிடம் அதிமுக கோரிக்கை
1 min read
Special intensive voter verification work: AIADMK requests Tenkasi Collector
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக நேற்று தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் புதிய கோரிக்கை மனு ஒன்றை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்தனர்.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் இருவருடன் அதிமுக நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்
அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
01.01.2026 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, தேர்தல் ஆணையத்தால், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குச் சாவடி அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ- 2) மூலமாக அதிகபட்சம் 50 படிவங்களை பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ- 2) மூலமாகப் பெற்றால், அதில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆகவே, வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரங்கள் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் வி பி மூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பாராஜ், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குணம் என்ற உத்திரகுண பாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பாலமுருகன், ஸ்டீல் மாரியப்பன், தென்காசி நகர அவைத்தலைவர் முத்துக்குமாரசுவாமி, கிளை செயலாளர்கள் ராமர்பாணடி, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.