அல்பலா பல்கலைக்கழக குழும தலைருக்கு 13 நாட்கள் அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி
1 min read
Delhi blast: Alfalah University Group chairman arrested
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.
இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமலாக்கத்துறையின் இந்த சோதனையில் அங்கு பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. பல்கலைக்கழக அறக்கட்டளை நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்பலா பல்கலைக்கழக குழுமத்தின் தலைவர் ஜவாத் அகமது சித்திக்கியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷீடல் சவுத்ரி முன் ஜவாத் அகமது சித்திக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சித்திகை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.