June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தஞ்சாவூா்: அரசு பள்ளி ஆசிரியை கொலை- காதலன் கைது

1 min read

Thanjavur: Government school teacher murdered – boyfriend arrested

27/11/2025
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில், மேல களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (வயது 26).இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், (வயது 29), என்பவர் காதலித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

ஆனால் காவியாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த, அஜித் குமார் இன்று காவியா பள்ளிக்கு செல்லும் போது கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சாவூரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெண் ஆசிரியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

சில நாட்களுக்கு முன், ராமேஸ்வரத்தில், இதே போல காதலிக்க மறுத்த மாணவி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்ட ரணம் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், மீண்டுமொரு கொடூரச் சம்பவம் அதே போல நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களின் விருப்பு வெறுப்பை மதிக்கக் கூட திராணியற்றுவிட்டதா திமுக ஆட்சியின் கீழுள்ள தமிழ்ச் சமூகம்? தன்னை மறுக்கும் பெண்ணைக் கொலை செய்யும் அளவிற்குக் குற்றவாளிக்கு தைரியம் அளித்தது சீரழிந்த சட்டம் ஒழுங்கா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறையா?

கற்பழிப்பு, கடத்தல், காதலிக்க மறுத்ததால் கொலை என அனுதினமும் தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களைக் கண்டு, பெண் பிள்ளைகளைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மடல் வாசித்து மகிழ்கிறார்.

இந்த லட்சணத்தில் இருந்துகொண்டு, ‘அப்பா’ என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு.பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *