August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓடிபி கட்டாயம்

1 min read


OTP mandatory for Tatkal ticket booking at counters

4.12.2025
முன்பதிவு கவுன்டர்களில் வாங்கப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொல்லை ரெயில்வே கட்டாயமாக்கவுள்ளது.

முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஓடிபி அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை நவம்பர் 17 முதல் ஒரு சில ரெயில் நிலையங்களின் முன்பதிவு கவுன்டர்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த முறையை அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே இனிமேல், கவுன்டர்களில் முன்பதிவு படிவத்தை நிரப்பிய பிறகு, முன்பதிவு செய்யும் போது மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி- ஐ உள்ளிடுவதன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *