அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசி வருகை
1 min read
Achankovil Jewelry Box Tenkasi Visit
17.12.2025
அச்சன் கோவில் ஆபரண பெட்டி தென்காசி வந்த போது திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்று கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் ஆகும். தென்காசி வழியாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம். தென்காசி மாவட்டம் செங் கோட்டையிலிருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் அச்சன்கோவில் உள்ளது. இங்கு யாருக்காவது பாம்பு கடித்தால் இந்த கோவிலில் பூசாரி தீர்த்தம் கொடுக்கும் போது விஷம் இறங்கும் என்று நம்பப் படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழா நாட்களில் ஐயப்பனுக்கு விலை மதிக்க முடியாத அளவில் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப் படும். இந்தப் பெட்டியில் ஐயப்பன் போர் புரிந்த தங்க வாள் உள்ளது. இந்த வாளின் எடை இடத்திற்கு இடம் மாறுபடும் என்பது முந்தைய வரலாறு எனக் கூறுகிறார்கள். இந்த ஆபரணங்கள் அடங்கிய ஆபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருக்கும். இந்த பெட்டியை வழக்கமாக பக்தர்கள் புடை சூழ எடுத்து வந்து ஐயப்பனுக்கு அணிவிப் பார்கள். அதன்படி நேற்று புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஆபரணப்பெட்டி எடுத்துவரப்பட்டு புனலூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. தரிசனம் முடிந்த பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இதற்கென ஆபரண பெட்டி வரவேற்பு குழு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள வாகனத்தில் ஏற்றப் பட்டு பட்டத்து யானை முன் வர மேளதாளங்களுடன் காலை 10-30 மணிக்கு புனலூரில் இருந்து ஊர்வ லமாக பெட்டி எடுத்து வரப் பட்டது. அங்கிருந்து ஆரியங் காவு, புளியரை, செங் கோட்டை வழியாக தென் காசிக்கு இந்த பெட்டி நேற்று மதியம் சுமார் 2 மணிக்கு கொண்டு வரப்பட் டது .
காசி விசுவநாதர் சுவாமி கோவில் முன்பு ஆபரண பெட்டிக்கு ஏராளமான பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆபரண பெட்டி வரவேற்பு குழு தமிழ்நாடு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன் தலை மையில் வரவேற்பு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்திரு ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆபரண பெட்டி வரவேற்பு குழு செய லாளர் ஜி. மாடசாமி ஜோதிடர், பொருளாளர் அபிநயா கண்ணன், அன்ன தான கமிட்டி அமைப்பாளர் லட்டு கண்ணன், நிர்வாகிகள் ஆடிட்டர் நாராயணன், முன்னாள் ரோட்டரி சங்க கவர்னர் தொழி லதிபர் கே. ராஜகோபாலன், தொழி லதிபர்கள் எஸ்.பி.டி.ஏ.குமார், எஸ்.பி. டி.ஏ. ராஜசேகர், மாரி முத்து, சுப்புராஜ், ஏ.சி.மணி, துரை, ஐயப்ப சேவா சங்கத் தலைவர் அழகிரி, செயலாளர் ராமசுப்பு, பொருளாளர் தங்க வேல் ஆசாரி மற்றும் ஏராள மான ஐயப்ப பக்தர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.