தென்காசியில் 19-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
1 min read
Private sector job placement camp to be held in Tenkasi on the 19th
17.12.2025
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.12.2025 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் அருகில் KFC பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் முதல் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (19.12 2025) அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் B ஆம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து முகாமில் கொள்ள விரும்பும் கொள்ளலாம். தங்களது இவ்வேலைவாய்ப்பு கலந்து @ www.tnprivatejobs.tn.gov.in στο ी Candidate Login விபரங்களை பதிவு செய்ய வேண்டும்
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in நிறுவனம் தொடர்பான என்ற வலைதளத்தில் Employer Login விவரங்களை செய்ய இல் பதிவு வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel இல் இணைந்தும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.