செங்கோட்டை: அடகு வைத்த நகையைஏலம் விட்ட தனியார் வங்கி- கணவன் மனைவி முற்றுகை
1 min read
Red Fort: Husband and wife besiege private bank that auctioned off pawned jewelry
20/12/2025
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியைச் சார்ந்த ஒருவர் தனியார் வங்கியில் அடகு வைத்த நகையை தனக்குத் தெரியாமல் ஏலம் விட்டதாக கூறி வங்கி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், புளியரை பகுதியைச் சேர்ந்தவர் மணியன் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான 104 கிராம் தங்க நகையினை செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 3 லட்சத்து 37 ஆயிரம் பெற்றுக்கொண்டு அடகு வைத்துள்ளார்.
தான் பெற்ற கடனுக்கு இதுவரை முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கியில் இருந்து அவரது நகை ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் தாங்கள் வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி போக மீதம் உள்ள தொகையினை பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணியன் நேற்று காலையில் தனது மனைவியுடன் செங்கோட்டை தனியார் வங்கிக்கு வந்துள்ளார். அப்போது தான் பெற்றுள்ள கடன் மற்றும் அதற்குரிய வட்டி தொகையை கட்டுகிறேன் எனது நகையை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டபோது வங்கி மேலாளர் உங்கள் நகை ஏலம் விடப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மணியன் மற்றும் அவரது மனைவி இருவரும் வங்கியின் போக்கை கண்டித்து வங்கி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.