June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

1 min read

Departure time of Nellai and Pothikai Express trains changed

24.12.2025
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரெயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரெயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரெயில் தினசரி சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. இதுபோல, சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை -சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12632), நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. வருகிற 1-ந் தேதி முதல் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது 8.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூருக்கு 7 மணிக்கு பதில் 7.10 மணிக்கு சென்றடையும்.

செங்கோட்டை -சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) ரெயில் தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது. 1-ந் தேதி முதல் 6.50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6.10 மணிக்கு பதில், 5.55 மணிக்கே எழும்பூரை சென்றடைகிறது.

இதுதவிர செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் -தாம்பரம் ரெயிலின் (16102) வேகம் அதிகரித்து, பயண நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தற்போது தாம்பரத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்கிறது. வருகிற 1-ந்தேதி முதல் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு 1.25 நிமிடங்கள் முன்னதாக, அதாவது காலை 6.05 மணிக்கு சென்றடைகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *