தென்காசியில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் கடன் உதவி
1 min read
Loan assistance from the District Pioneer Bank in Tenkasi
30.12.2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் முகாமில் 149 பயனாளிகளுக்கு ரூபாய் 6.33 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான கடன் உதவி மற்றும் கல்வி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ், பழனி நாடார் முன்னிலையில் வழங்கினார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், தென்காசி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 149 பயனாளிகளுக்கு ரூபாய் 6.33 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான கடன் உதவி மற்றும் கல்விக் கடன் உதவி வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் வழங்குவதற்காக 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை கடன் இலக்காக 1729.15 கோடி நிர்ணயிக்கப் பட்டுள்ளது தென்காசி மாவட்டத்தில் நிலவும் மூலப்பொருட்களின் வளம் மற்றும் உள் கட்டமைப்பு திறமை வாய்ந்த பணியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கப்பட்டு வருகிறது.புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தென்காசி மாவட்டம் தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றி விட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார். தொடர்ந்து நபார்டு வங்கியில் 2026 27 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில்மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருநெல்வேலி மண்டல மேலாளர் பாஸ்கரன் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.