June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

1 min read

Protest demanding old pension in Tenkasi

31.12.2025
தென்காசியில் போட்டா ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்டீபன் அந்தோணி ராஜ் பழனி ராஜேந்திரன் மாரிச்சாமி அனுகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதி காப்பாளர் கங்காதரன் வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்
நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை பொதுச் செயலாளர் நாஞ்சில் நிதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முருக கிங்ஸ்டன் வெற்றிவேலன் ராமநாதன் பழனீஸ்வரன் கணேசன் சந்திரன் சுப்பிரமணியன் சுரேஷ் சங்கரலிங்கம் மணிமேகலை
வேல் மயில் சுப்பிரமணியன் ஸ்டாலின் தங்கப்பாண்டி பரமசிவம், மாரி மகாராஜா, முத்து மீராஷா, கோவில் பிச்சை மேடை ஈஸ்வரி, வெள்ளத்துரை அனுசுயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராம் பிரசாத் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *