திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை: திமுக முன்னாள் ஒன்றிய செயலர் த.வெ.க.வுக்கு மாறினார்
1 min read
Former DMK Union Secretary defected to TDP over Thiruparankundram Deepam issue
5/1/2026
திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தவெகவில் இணைந்தார் . திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை அரசு தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்
மதுரை திருப்பரங்குன்றம் திமுக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் . இவர் முப்பது ஆண்டுகளாக தி . மு . க , வில் இருந்தார் . கிளை , ஒன்றிய செயலாளர் , பதினாறு ஆண்டுகள் கவுன்சிலர் பதவி , மாவட்ட திட்டக் குழு துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார் . இந்நிலையில் இன்று அவர் , த . வெ . க , தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்
இதன் பிறகு அவர் கூறியதாவது –
: திமுகவில் ஜனநாயகம் இல்லை . சமத்துவமும் இல்லை . நான் ஆன்மிகவாதி . திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சி துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை சிறுபான்மையினரின் ஓட்டு அரசியலுக்காக திமுக மறுத்துவந்தது . இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களில் நானும் ஒருவர் . திமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்தாலும் ஹிந்து என்ற உணர்வில் இருந்த நான் அச்சம்பவத்தால் மனஉளைச்சலில் இருந்தேன் . தற்போது தவெகவில் இணைந்துள்ளேன் . இவ்வாறு அவர் கூறினார் .