தமிழகத்திற்கு காங். தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
1 min read
Congress appoints election observers for Tamil Nadu
8.1.2026
எதிர்வரும் சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவுக்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜார்ஜ், இம்ரான் பிரதாப்கார்ஹி மற்றும் கன்னையா குமார் ஆகிய 4 பேரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அசாம் மாநில தேர்தல் பார்வையாளர்களாக பூபேஷ் பாகல், டி.கே. சிவக்குமார் மற்றும் பந்து திர்கே ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களின் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.