June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு பெட்டக அறை திறப்பு

1 min read

Opening of the security vault at the Kashi Vishwanathar Temple in Tenkasi

12.1.2026

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் சுமார் ஏழு லட்சம் மதிப்பில் பாதுகாப்பு பெட்டக அறை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தனது சொந்த செலவில் கட்டப் பட்ட அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடார் தலைமை வகித்து பாதுகாப்பு பெட்டக அறையினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில் தென்காசி காசி விசுவநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.பாலகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் பொன்னி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், சந்தோஷ், கவுன்சிலர்கள் பூமாதேவி முருகன், சுப்ரமணியன், வேல் முத்து, நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், ஜெயபால், துணைத் தலைவர் சித்திக், பொருளாளர் ஈஸ்வரன், சிந்தாமணி சண்முகவேல், துரை, மற்றும் கட்சி நிர்வாகிகள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *