தென்காசி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்
1 min read
Stalin Higher Medical Services Camp to Protect Health in Tenkasi District
12.1.2026
தென்காசி மாவட்டம், இலத்தூர் வட்டாரம் புளியரை, சங்கரன்கோவில் வட்டாரம் குருவிகுளம், குருவிகுளம் வட்டாரம் கலிங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், இலத்தூர் வட்டாரம், புளியரை, அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 31.01.2026 (சனிக்கிழம) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற உள்ளது.
சங்கரன்கோவில் வட்டாரம் கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆண்கள மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 24.01.2026 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறஉள்ளது
அரசு மேலும்,
குருவிகுளம் வட்டாரம், கலிங்கப்பட்டி, மேல்நிலைப்பள்ளியில் நலம் காக கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 07.02.2026 (சனிக்கிழம ) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய மருத்தவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
முதல்வரின் மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவர் களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.
எனவே, பொது மக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெறறுக் கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.